கவர்ச்சி நடன வீடியோவை வைரலாக்கிய நடிகை சீதை வேடம் ஏற்றார்... நெட்டிசன்கள் கடும் கண்டனம்

நடிகை அஞ்சலி அரோராவுக்கு இன்ஸ்டாகிராமில் 1.32 கோடி பேர் பின்தொடர்வோராக உள்ளனர்.;

Update:2025-10-16 12:43 IST

புனே,

சமூக ஊடகத்தில் கச்சா பாதம் ராணி என நெட்டிசன்களால் அறியப்படும் நடிகை அஞ்சலி அரோரா. இவரை இன்ஸ்டாகிராமில் 1.32 கோடி பேர் பின்தொடர்வோராக உள்ளனர். கச்சா பாதம் பாடலுக்கு கலக்கல் நடனம் ஆடி பிரபலம் ஆனவர். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலானது. அதில், தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் மதுபான பார் ஒன்றில் நடனம் ஆடுகிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுதவிர, கவர்ச்சியான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு அதற்காக 3.3 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் லைக்குகளையும் அள்ளினார்.  இந்நிலையில், ரஜ்னீஷ் டுகால், நிர்பய் வாத்வா உள்ளிட்டோர் நடிக்கும் ஸ்ரீ ராமாயண கதை என்ற திரைப்படத்தில் அவர் சீதையின் வேடம் ஏற்று நடிக்க இருக்கிறார்.

இதற்கான புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. இதனை பார்த்த பின்னர் பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாவில் நடனம் ஆடுகிற பெண்ணை சீதாவின் வேடத்தில் பார்க்க ஏற்று கொள்ள முடியாது என்றும், இது அவரை புண்படுத்தும் முயற்சி என்றும் கலியுகத்தின் இருண்ட காலம் தொடங்கி விட்டது என்றும் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இதேபோன்று பட தயாரிப்பாளர்களுக்கு எதிராகவும் கடும் கண்டனங்களை வெளியிட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்