தள்ளிப்போகிறதா ஷர்வானந்தின் ’பைக்கர்’ திரைப்படம்?
இப்படத்தில் மாளவிகா நாயர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.;
சென்னை,
ஷர்வானந்தின் “பைக்கர்” படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் “அகண்டா 2” டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
இதனால், “பைக்கர்” பட தயாரிப்பாளர்கள் ரிலீஸ் தேதியை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, "பைக்கர்" டிசம்பர் மாதம் இறுதிக்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் ஷர்வானந்தின் தந்தையாக ராஜசேகர் நடிக்க, மாளவிகா நாயர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அபிலாஷ் ரெட்டி கங்காரா இயக்கியுள்ளார்.
தலைப்பை போலவே, இந்தப் படம் பந்தயத்தில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு பைக்கரை சுற்றி வருகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார்.