நான் மிகவும் அதிர்ஷ்டசாலி - பாக்யஸ்ரீ போர்ஸ்

பாக்யஸ்ரீ சமீபத்தில் காந்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.;

Update:2025-11-23 06:06 IST

சென்னை,

ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது அதிகம் விரும்பப்படும் கதாநாயகியாக மாறிவிட்டார். விஜய் தேவரகொண்டாவுடன் ’கிங்டம்’ நடித்த இவர் சமீபத்தில் காந்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தற்போது, இவர் ராம் பொதினேனி ஹீரோவாக நடிக்கும் ’ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள், போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்தப் படம் வருகிற 27-ம் தேதி வெளியாகிறது.

கதாநாயகியாக இவர் நடிப்பில் இதுவரை மூன்று படங்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், ஏற்கனவே பாக்யஸ்ரீக்கு ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. இது குறித்து அவர் பேசுகையில்,

"நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். அனைவருக்கும் இதுபோன்ற அன்பு, பாசம் கிடைப்பதில்லை. அவர்களின் அன்பையும் மரியாதையையும் தொடர்ந்து பெறுவேன் என்று நம்புகிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்