மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3‘ படப்பிடிப்பு நிறைவு

இப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.;

Update:2025-12-02 18:46 IST

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்3’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.

பின்னர் ‘திரிஷ்யம்’படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் இப்படத்தின் மூன்றாம் பாகமான ‘திரிஷ்யம் 3’ படத்தை அறிவித்தார். இந்த ஆண்டு செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தநிலையில், முழு படக்குழுவும் கேக் வெட்டி கொண்டாடுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்