நடிகை யாமினியின் ’சைக் சித்தார்த்தா’...டிரெய்லர் வெளியீடு
இப்படத்தில் ஸ்ரீ நந்து கதாநாயகனாக நடித்திருக்கிறார்.;
சென்னை,
ஸ்ரீ நந்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘சைக் சித்தார்த்தா’. வருண் ரெட்டி இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் ஷ்யாம் சுந்தர் ரெட்டி துடி தயாரிப்பாளராகவும், ஸ்மரண் சாய் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
இப்படத்தில் யாமினி பாஸ்கர் கதாநாயகியாக நடித்திருக்கிரார். மேலும், நரசிம்ம எஸ், பிரியங்கா ரெபேக்கா ஸ்ரீனிவாஸ், சுகேஷ், வடேகர் நர்சிங் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்தப் படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியாக உள்ளது.