'வா வாத்தியார்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 5-ம் தேதி வெளியாக இருக்கும்நிலையில், படக்குழு தற்போது புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகிறது.