பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

காதல் கலந்த கமர்ஷியல் கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளது.;

Update:2025-10-27 14:02 IST

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பவிஷ், அடுத்தடுத்த படத்திற்கான கதைகளை கேட்டு வந்தார். தற்போது மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் ‘போகன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாகா துர்கா கதாநாயகியாக நடிக்க உள்ளார். காதல் கலந்த கமர்ஷியல் கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தினை கிளாப் அடித்து தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்