''டகோயிட்'' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியது ஏன்?...உண்மையை உடைத்த அதிவி சேஷ்
டகோயிட் படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கான காரணத்தை அதிவி சேஷ் பகிர்ந்திருக்கிறார்.;
சென்னை,
அதிவி சேஷ் கதாநாயகனாக நடித்து வரும் படம் ''டகோயிட்''. இதில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்து வருகிறார்.
முதலில் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால், சில காரணங்களால் பின்னர் விலகினார். அவர் விலகியது குறித்து பல வதந்திகள் இணையத்தில் வந்தன.
இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டகோயிட் படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கான காரணத்தை அதிவி சேஷ் பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறுகையில், "கூலியில் ஸ்ருதிஹாசன் பிஸியாக இருந்தார். அதனால் ''டகோயிட்'' படத்திற்கு அவரால் தேவையான தேதிகளை கொடுக்க முடியவில்லை," என்றார்.