'வாரணாசி' பட விழாவில் பாடிய சுருதிஹாசன்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

"வாரணாசி" படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.;

Update:2025-11-21 12:13 IST

ஐதராபாத்,

ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வாரணாசி’. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை பிரியங்கா சோப்ரா 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்திலும், ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே ரூ.27 கோடி செலவு செய்துள்ளனர். குறிப்பாக (LED) எல்இடி ஸ்டேஜிற்காக மட்டுமே ரூ.8 கோடி செலவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகையும், பாடகியுமான சுருதிஹாசன் பாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார். அதற்காக சுருதி ஹாசனுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்