பிரபாஸின் “ஸ்பிரிட்” படப்பிடிப்பை தொடங்கி வைத்த சிரஞ்சீவி
‘ஸ்பிரிட்’ படத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.;
பிரபாஸ், தற்போது 'தி ராஜா சாப்' மற்றும் 'பவுஜி' ஆகிய படங்களில் மும்முரமாக உள்ளார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படமும் அதில் ஒன்று. ‘ஸ்பிரிட்’ படத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி கதாநாயகியாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன், பிரகாஷ் ராஜ், விபேக் ஓபராய் ஆகியோர் 'ஸ்பிரிட்' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. நடிகர் சிரஞ்சீவி கிளப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.