மீனாட்சி சவுத்ரி-நாக சைதன்யா பட டைட்டிலை வெளியிட்ட மகேஷ் பாபு
இன்று நாக சைதன்யாவின் பிறந்தாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.;
சென்னை,
நாக சைதன்யா, இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு கூட்டணியில் உருவாகி வரும் புராண திரில்லர் படத்திற்கு தற்காலிகமாக ’என்சி24’ எனப்பெயரிடப்பட்டிருந்தது. இதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.
படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நாக சைதன்யாவின் பிறந்தாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இதனை மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்திற்கு ’விருஷகர்மா’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் லாபட்டா லேடீஸ் நடிகர் ஸ்பர்ஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் கீழ் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் பி. லோக்நாத் இசையமைக்கிறார்.