’சிக்மா’: ஜேசன் சஞ்சய் படத்தில் சிறப்பு பாடல் - நடனமாடும் பிரபல நடிகை?

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா.;

Update:2025-12-05 15:08 IST

சென்னை,

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகப் அறிமுகமாகும் முதல் படத்தின் பெயர் 'சிக்மா' . இந்த அதிரடி ஆக்சன் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

'சிக்மா' படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க தமன் இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் ஜேசன் சஞ்சய் ஒரு சிறப்பு பாடலை வைத்துள்ளதாகவும் அதில் கேத்தரின் தரேசா நடனமாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த பாடலில் ஜேசன் சஞ்சய் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்