மோகன்லாலால் தாமதமாகிறதா சிவகார்த்திகேயனின் புதிய படம் ?

விநாயக் சந்திரசேகரன் படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக மோகன்லால் நடிக்க உள்ளதாக தெரிகிறது.;

Update:2025-07-12 14:31 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் கடைசியாக நடித்திருந்த வாழ்க்கை வரலாற்றுப் படமான அமரன், ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து, கெரியரில் முக்கிய படமாக மாறியது.

முருகதாஸ் இயக்கத்தில் ''மதராஷி'' மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ''பராசக்தி'' ஆகிய சிவகார்த்திகேயனின் அடுத்த இரண்டு படங்கள் சில மாதங்கள் இடைவெளியில் வெளியாக உள்ளன.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு மற்றும் குட் நைட் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இதில், விநாயக் சந்திரசேகரன் படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை தயாரிப்பாளர்கள் அணுகியதாக தெரிகிறது. மோகன்லால் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், மோகன்லால் தற்போது பல படங்களில் பிஸியாக இருப்பதால், இந்த படம் துவங்க சிறிது தாமதமாகலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த எதிர்பாராத தாமதம் காரணமாக, வெங்கட் பிரபுவின் படத்தை முதலில் துவங்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்