'தோஸ்தானா 2' - ஜான்வி கபூருக்கு பதில் ஸ்ரீலீலாவா ?
’தோஸ்தானா 2’ படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;
சென்னை,
அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பாலிவுட்டை கலக்கி வருகிறார் ஸ்ரீலீலா. அந்த வகையில் தற்போது 'தோஸ்தானா 2' படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில், ஆரம்பத்தில் கார்த்திக் ஆர்யன், ஜான்வி கபூர் மற்றும் லக்சய் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. தற்போது புதிய நடிகர்கள் மற்றும் கதைக்களத்துடன் படம் மீண்டும் தொடங்கப்பட உள்ளாதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் லக்சய் மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோருடன் ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.