''சுமதி வளவு 2'' அறிவிப்பு...ரசிகர்கள் ஆர்வம்

''சுமதி வளவு 2: தி ஆரிஜின்'' என்ற பெயரில் இப்படம் உருவாக இருக்கிறது.;

Update:2025-08-10 10:14 IST

சென்னை,

திகில் திரைப்படமான ''சுமதி வளவு'' திரையரங்குகளில் தொடர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

''சுமதி வளவு 2: தி ஆரிஜின்'' என்ற பெயரில் இப்படம் உருவாக இருக்கிறது. முதல் பாகத்தில் பணியாற்றிய இயக்குனர் விஷ்ணு சசி சங்கர், எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை, இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் கோகுலம் கோபாலன் மற்றும் முரளி குன்னும்புரத் உள்ளிட்ட அதே குழுவினர் இதிலும் பணியாற்ற உள்ளனர். ஆனால், அதே நடிகர்கள் நடிப்பார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த 1 -ம் தேதி திரைக்கு வந்த சுமதி வளவு, மந்தமான விமர்சனங்களை பெற்ற போதிலும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில், அர்ஜுன் அசோகன், மாளவிகா மனோஜ், சித்தார்த் பரதன், கோகுல் சுரேஷ், பாலு வர்கீஸ், சைஜு குருப், ஷிவதா, தேவானந்தா, ஸ்ரீபத் யான், ஜூஹி ஜெயக்குமார், ஜஸ்னியா கே ஜெயதீஷ், கோபிகா அனில் மற்றும் ஷ்ரவன் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை பாமா இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்