"படையப்பா" ரீ-ரிலீசை தியேட்டரில் கண்டு ரசித்த நீலாம்பரி

நடிகை ரம்யா கிருஷ்ணா படையப்பா ரீ-ரிலீசை தியேட்டருக்கே நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளார்.;

Update:2025-12-22 07:07 IST

சென்னை,

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன் ஆகியோர் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம 'படையப்பா'. இந்த படம் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 12ந் தேதி வெளியானது.

25 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடாகியும் வசூல் வெற்றியைப் பெற்று, இப்படம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தை தியேட்டரில் பார்த்து கண்டு ரசித்தார். மேலும், தனது செல்போன் அவர் நடித்த காட்சிகளை வீடியோ எடுத்தும் மகிழ்ந்தார். இந்தப் படத்தில் நீலாம்பரி எனும் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்