'தனுஷ் ஒரு அசாதாரண நடிகர்' - கிரித்தி சனோன்
தனுஷ் தற்போது ’தேரே இஷக் மே’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமில்லாமல், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார். அதேபோல், அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, பாடகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டுள்ளார்.
தனுஷ் தற்போது நடித்துள்ள இந்தி திரைப்படம் ’தேரே இஷக் மே’. இந்தப் படத்தில் கிரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 28 ஆம் தேதி தமிழ் , இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், ஒரு நிகழ்வில், தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபவத்தை கிரித்தி சனோன் பகிர்ந்துகொண்டார். தனுஷ் ஒரு அசாதாரண நடிகர் என்றும், அவருடன் நடிப்பது மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் கூறினார். தனுஷிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் இருவரும் பல படங்களில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
’தேரே இஷக் மே’ படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை டி. சீரிஸ் பதாகையின் கீழ் ஆனந்த எஸ். ராய், ஹிமான்ஷு சர்மா, பூஷன் குமார் மற்றும் கிருஷ்ணா குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.