'அனைவருக்கும் நன்றி' - அஜித்

நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு நேற்று டெல்லியில் பூத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.;

Update:2025-04-29 19:39 IST

டெல்லி,

நேற்று ஜனாதிபதி திரவுபதி முா்மு நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு பூத்ம பூஷன் விருதை வழங்கினார். விருதுபெற்ற புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் தாமு உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதை பெற்றனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். விரைவில் நேரில் சந்திப்போம்' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்