‘நடிகையின் சிறப்பே கவர்ந்து இழுப்பதுதான்' - சோபிதா துலிபாலா

சோபிதா துலிபாலாவிடம், நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேட்கப்பட்டது.;

Update:2025-10-10 07:32 IST

சென்னை,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு இருவருமே தற்போது பிசியாக சினிமாவில் நடித்து கொண்டிருக்கின்றனர்.

சினிமா படப்பிடிப்பு போக, சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை சோபிதா துலிபாலா வழக்கமாக கொண்டிருக்கிறார். அவ்வப்போது கலக்கலான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோபிதா துலிபாலாவிடம், நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சோபிதா துலிபாலா, ‘‘நடிகையின் சிறப்பே அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வசீகரம்தான். கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. அந்த கவர்ச்சி ரசிக்கும்படி இருக்கவேண்டும். என்னை பொறுத்தவரை எல்லா அம்சங்களும் நடிகைகளுக்கு முக்கியமே'', என்று பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்