அனுபவித்த வலிகள்...சொல்லும்போதே கண்கலங்கிய நடிகர் சூரி

தான் அனுபவித்த வலிகள் பற்றி ஒரு விழாவில் பேசும்போது நடிகர் சூரி கண்கலங்கினார்.;

Update:2025-12-27 14:41 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மாமன்' படம் வெளியானது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படமாக ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தான் அனுபவித்த வலிகள் பற்றி ஒரு விழாவில் பேசும்போது நடிகர் சூரி கண்கலங்கினார். அவர் பேசுகையில்,

`பல கஷ்டங்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து, எனக்கு டிரஸ் அளவு எடுத்தபோது கை, காலெல்லாம் நடுங்கி கண்ணு கலங்கியது. திடீரென அந்த கேரக்டருக்கு இன்னொருத்தர ரெக்கமண்ட் பண்ணிட்டாங்க. உடனே சட்டையை கழட்டுங்கள் என்றார்கள். அதே இடத்தில் சட்டையை கழட்டினேன்.

லாரி கிளீனராக இருந்தேன். சாக்கடையை அள்ளுகின்ற வண்டியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். அப்புறம் பெயிண்ட் அடிக்க சென்றேன். சென்னையில் இருக்கிற பெரிய கட்டடங்களில் என் கை படாத இடமே இல்லை’’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்