நடிகர் தர்ஷன் மனைவிக்கு எதிராக ஆபாச கருத்து பதிவிட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

நடிகர் தர்ஷன் மனைவிக்கு எதிராக ஆபாச கருத்து பதிவிட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-27 09:28 IST

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகர்களாக இருந்து வருபவர்கள் தர்ஷன் மற்றும் சுதீப். இந்த 2 நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வாடிக்கையாக நடக்கிறது. இவர்களில் தர்ஷன் நடித்துள்ள டெவில் திரைப்படம் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சுதீப் நடித்துள்ள மார்க் படமும் வெளியாகி இருக்கிறது.

இந்த படம் தொடர்பாக தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சுதீப், போருக்கு தயாராகும்படியும், எதற்கும் பயப்பட வேண்டாம் என்றும் ரசிகர்கள் மத்தியில் கூறியிருந்தார். இதற்கு தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி பதிலடி கொடுத்தார்.அதன்பிறகு, விஜயலட்சுமிக்கு எதிராக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துகளை ஒரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.

இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில், 18 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆபாச கருத்துகளை பதிவிட்டவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், 18 இன்ஸ்டாகிராம் கணக்குகளின் முகவரிகள் மூலமாக, ஆபாச கருத்துகளை பதிவிட்டவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்