"சினிமாவின் சிகரம்"… பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.;

Update:2025-12-12 07:48 IST

சென்னை,

பஸ் கண்டக்டராக தன் வாழ்க்கையை தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளவர் ரஜினிகாந்த். இவரின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோருடன் இணைந்து நடித்து தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் 170க்கும் அதிகமான படங்களில் நடித்து உலகம்முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக மத்திய அரசு 2000ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும், 2016ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் வழங்கி சிறப்பித்தது. மேலும் சினிமா துறையில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதமாக 2019ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. சென்னையில் நேற்று நடைந்த சர்வதேச திரைப்படவிழாவில் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவது பிறந்தநாளையொட்டி ‘படையப்பா' படம் இன்று மீண்டும் ரிலீசாகி இருக்கிறது.

தமிழ் சினிமா என்ற வானத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டாலும், மாறாத துருவ நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார், "சினிமாவின் சிகரம்" ரஜினிகாந்த்.

Tags:    

மேலும் செய்திகள்