ரஜினியின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்து விட்டனர்.;

Update:2025-12-12 07:33 IST

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்து விட்டனர். இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரை நூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar @rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்