'' தி ராஜா சாப்'' - ''துரந்தர்'': பாக்ஸ் ஆபீஸ் மோதல்...சஞ்சய் தத் கொடுத்த பதில்
'தி ராஜா சாப்' மற்றும் 'துரந்தர்' ஆகிய இரண்டு படங்களிலும் சஞ்சய் தத் நடித்துள்ளார்.;
சென்னை,
'தி ராஜா சாப்' மற்றும் 'துரந்தர்' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளநிலையில், இரண்டிலும் நடித்துள்ள சஞ்சய் தத், மோதலை விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார்.
கடந்த வியாழக்கிழமை மும்பையில் நடைபெற்ற 'கே.டி - தி டெவில்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் சஞ்சத் இது குறித்து பேசினார். அவர் கூறுகையில்,
"இது ஆச்சரியமாக இருக்கிறது. நான் இரண்டு படங்களிலும் வெவ்வேறான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். 'துராந்தர்'-ல் வேறு, 'தி ராஜா சாப்'-ல் வேறு. இரண்டும் பாக்ஸ் ஆபீஸில் மோதுவதை நான் விரும்பவில்லை, அவை மோதக்கூடாது என்று நம்புகிறேன்'' என்றார்.
ஆதித்யா தார் இயக்கியுள்ள 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் மற்றும் அக்சய் கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். .
மாருதி இயக்கியுள்ள 'தி ராஜா சாப்' படத்தில் பிரபாஸ், போமன் இரானி, மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவ்விறு படங்களும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.