பராசக்தி படத்தில் எந்த சர்ச்சை காட்சியும் இல்லை: சிவகார்த்திகேயன்
நான் எந்த பிரசாரமும் செய்யவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை என்று சிவகார்த்திகேயன் கூறினார்.;
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சரத்குமார், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சிவகார்த்திகேயன் கூறியதாவது:
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். காங்கிரசார் படத்தை பார்த்தால் புரிந்து கொள்வார்கள். மக்கள் பராசக்தி படத்தை சரியான வகையில் புரிந்து கொண்டுள்ளனர். படத்தில் எந்த சர்ச்சை காட்சியும் இல்லை. நான் எந்த பிரசாரமும் செய்யவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஏற்கனவே வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன். ஜனநாயகன் படம் விரைவில் வெளியாகும்” என்றார்.