அருண் விஜய்யை இயக்கும் முத்தையா

அருண் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை முத்தையா இயக்கவுள்ளார்.;

Update:2026-01-13 21:10 IST

1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாபியா', 'வணங்கான்' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 36-வது படமான 'ரெட்ட தல' படம் சமீபத்தில் வெளியானது. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் ‘பார்டர்’. இப்படம் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலினால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

அருண் விஜய், “அடுத்து நாயகனாக முத்தையா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். ‘ரெட்ட தல’ படத்தினைத் தொடர்ந்து ‘பார்டர்’ படமும் விரைவில் வெளியாகும். அதுவும் விரைவில் வெளியாகவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்த ‘‘ராம்போ’  படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தனது மகனை நாயகனாக வைத்து ’சுள்ளான் சேது’ என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்