ஒரே தமிழ் படம்...பைசனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'.;

Update:2026-01-13 22:48 IST

சென்னை,

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் லெட்டர்பாக்ஸ்டு டாப் 10 ஆக்சன்/அட்வென்சர்(Letterboxd Top 10 Action / Adventure) திரைப்பட தரவரிசைப் பட்டியலில் ஒரே தமிழ் படமாக 'பைசன் காளமாடன்' இடம்பெற்றுள்ளது. 7வது இடத்தை லோகா, 8வது இடத்தை துரந்தர் ஆகிய இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்திய 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இந்நிலையில், சர்வதேச திரைப்பட விமர்சன தளமான லெட்டர்பாக்ஸ்டு தளத்தில் இந்தாண்டிற்கான டாப் 10 ஆக்சன்/அட்வென்சர் திரைப்பட தரவரிசைப் பட்டியலில் 5-வது இடத்தில்  'பைசன் காளமாடன்' இடம்பெற்றுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்