’ஓஜி’-க்கு 2 மடங்கு அந்த படம் இருக்கும் - வைரலாகும் தயாரிப்பாளரின் பேச்சு
பவன் கல்யாணின் அடுத்த படம் ஹரிஷ் சங்கர் இயக்கும் 'உஸ்தாத் பகத் சிங்'.;
சென்னை,
பவன் கல்யாணின் 'தே கால் ஹிம் ஓஜி' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தெலுங்கு படமாகவும் மாறியது. அவரது அடுத்த படம் ஹரிஷ் சங்கர் இயக்கும் 'உஸ்தாத் பகத் சிங்'.
இந்நிலையில், இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் ரவி ஷங்கர் சொன்ன விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், "நீங்கள் ஓஜி-ஐ ரசித்தீர்கள், உஸ்தாத் பகத் சிங் அதற்கு 2 மடங்கு இருக்கும். பவன் கல்யாணின் ரசிகரான ஹரிஷ் ஷங்கர், மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
“உஸ்தாத் பகத் சிங்” படத்தில் பவன் கல்யாண் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.