ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ''துப்பாக்கி'' பட வில்லன்
வித்யுத் ஜம்வால், ''ஸ்ட்ரீட் பைட்டர்'' படத்தில் தல்சிமாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;
சென்னை,
தமிழில் துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், ''ஸ்ட்ரீட் பைட்டர்'' படத்தில் தல்சிமாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் படமாக இது இருக்கும்.
இந்த படம் கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் ரியூவாக ஆண்ட்ரூ கோஜி, கென்னாக நோவா சென்டினியோ, எம் பைசனாக டேவிட் டஸ்ட்மால்ச்சியன், கெய்லாக கோடி ரோட்ஸ், பிளாங்காவாக ஜேசன் மோமோவா மற்றும் பால்ராக்காக கர்டிஸ் ஜாக்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், வேகாவாக ஆர்வில் பெக், டான் ஹிபிகியாக ஆண்ட்ரூ ஷூல்ஸ், அகுமாவாக ரோமன் ரெய்ன்ஸ் மற்றும் ஈ ஹோண்டாவாக ஹிரூக்கி கோட்டோ ஆகியோரும் உள்ளனர். இந்த படத்தை கிட்டாவோ சகுராய் இயக்குகிறார்.