விஜய் தேவரகொண்டாவின் புதிய பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து படக்குழு ஒரு ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update:2025-06-29 20:19 IST

இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவரது 14-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. திரைப்படம் ஒரு பீரியட் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படம் 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை விவரிக்கிறது.

19 ம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது.

இயக்குநரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து படக்குழு ஒரு ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராகுல் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்