''வார் 2'' டிரெய்லர் எப்போது? - வெளியான முக்கிய அப்டேட்
வார் 2'' படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.;
சென்னை,
பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்பை ஆக்சன் திரில்லர் படங்களில் ஒன்றான ''வார் 2'', ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழ் , இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியாக உள்ளது.
அயன் முகர்ஜி இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் (பாலிவுட்டில் அறிமுகமாகிறார்) மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில், டிரெய்லர் தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது.
அதன்படி, இந்த டிரெய்லர் 2 நிமிடங்கள் 39 வினாடிகள் இருக்கும் என கூறப்படுகிறது. டிரெய்லரின் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அடுத்த சில நாட்களுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.