"தெறி" ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பா? - தயாரிப்பாளரின் பதிவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தெறி படம் வருகிற 23-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.;

Update:2026-01-19 06:35 IST

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், படம் வெளியாகவில்லை.

‘ஜனநாயகன்’ வெளியாகததால் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படம் கடந்த 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். ஆனால், பொங்கலுக்கு வெளியாகும் புதிய தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க "தெறி" படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து படம் வருகிற 23-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில், தெறி ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட உள்ளதுபோல் தெரிகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் தாணு நேற்று வெளியிட்ட பதிவு விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த பதிவில், 

’புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே வி கிரியேஷன்ஸ்(V Creations) நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி’ என்று தெரிவித்திருக்கிறார். இதனால் "தெறி" ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறதா என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்