‘தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன்’...அஸ்வினின் வெப் தொடரை எப்போது, எதில் பார்க்கலாம்?
இதில் சீரியல் நடிகை பிரீத்தி சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.;
சென்னை,
ஜஸ்வினி ஜே இயக்கிய திரில்லர் படமான ’தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன்’ என்ற புதிய வலைத் தொடர் ஆஹாவில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது. இது டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. இதன் எபிசோடுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 7 மணிக்கு வெளியாகிறது.
இந்த சஸ்பென்ஸ் திரில்லரில் அஸ்வின் குமார், குரு லக்சுமன், பதினேகுமார், ஸ்ரீது கிருஷ்ணன் மற்றும் பிரபல சீரியல் நடிகை பிரீத்தி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.