ஓடிடியில் ஹரிஷ் கல்யாணின் ’டீசல்’.. எதில், எப்போது பார்க்கலாம்?

சண்முகம் முத்துச்சாமி இயக்கிய டீசல் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.;

Update:2025-11-19 12:44 IST

ஹரிஷ் கல்யாண் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வெளியான படம் ‘டீசல்’. இப்படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கியிருந்தார். இதில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 21ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்