நாகை கன்னித்தோப்பு பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
நாகை மாவட்டம் கன்னித்தோப்பு சௌந்தரராஜபெருமாள் ஆலத்தில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.;
நாகப்பட்டினம் மாவட்டம் கன்னித்தோப்பு கிராமத்தில் பழமை வாய்ந்த சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலத்தில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்திற்காக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு ஹோமங்கள், மாலை அணிவித்தல் மாற்றும் காப்பு கட்டுதல் கன்னிகாதாரணம், வஸ்திரம் சாத்துதல், பூநூல் அணிவித்தல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கிராம மக்கள் சீர்வரிசை எடுத்துவர, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருக்கல்யாண வைபத்தில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.