கீழ்பென்னாத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
பூஜையில் 108 பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.;
கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு, கீழ்பென்னாத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் 13-வது ஆண்டாக திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி, காலையில் அர்ச்சுனன், திரௌபதி அம்மன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தும், சிறப்பு அலங்காரம் செய்தும் வழிபட்டனர்.
மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்துகொண்டு, உலக மக்கள் நலமுடன் வாழவேண்டும் எனவும், மக்கள் மன குழப்பம் தீர்ந்து மன நிம்மதியுடன் குடும்ப ஒற்றுமையுடன் வாழவேண்டும் எனவும், இயற்கை வளங்கள் பெருகிட வேண்டும் எனவும் வேண்டுதலை முன்வைத்து விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.