காரைக்கால்: பச்சூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.;

Update:2025-11-17 16:33 IST

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த பச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் விசுவாவசு வருஷம் கார்த்திகை மாத முதல்நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அய்யப்பனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

மேலும் இவ்வாலயத்தில் அமைந்திருக்கும் கன்னிமூல கணபதி மற்றும் மாளிகைபுரத்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று கார்த்திகை முதல் நாள் என்பதால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து, சபரிமலைக்கு செல்வதற்காக புனித மாலையான துளசிமாலை அணிந்து விரதம் தொடங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்