இந்தியாவின் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நேபாள பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2023-01-26 09:12 GMT

காத்மாண்டு,

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளின் அலங்கார அணிவகுப்பு, கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதனிடையே இந்தியாவின் குடியரசு தின விழாவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல், தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும், இந்தியாவின் அன்பான மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்