தொலை தூர ஏவுகணையை பரிசோதித்து வடகொரியா அடாவடி

அமெரிக்கா வரை செல்லும் வகையில் தொலைதூர ஏவுகணையை வடகொரியா பரிசோதித்து பார்த்துள்ளது.

Update: 2022-11-18 03:51 GMT

Photo credit: AP

சியோல்,

கொரிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தாலும் அதற்கு எல்லாம் மதிப்பு கொடுக்காத கிம் ஜாங் அன் அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவை தாக்கும் வகையில் நீண்ட தூரம் செல்லும் ஏவுக்ணையை வடகொரியா பரிசோதித்து பார்த்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் இந்த சோதனை நடைபெற்றதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணையாக இது இருக்கலாம் என்று தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்