பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

காலையிலும், இரவிலும் பால் பருகுவது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.;

Update:2025-09-28 14:00 IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகும் பானமாக பால் விளங்குகிறது. அதனை காலையில் பருகுவது நல்லதா? இரவில் குடிப்பது சிறந்ததா? எப்போது பருகுவது அதிக நன்மை பயக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

காலையில் பருகினால்...

காலையில் பால் பருகுவது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். ஆரோக்கியமான கொழுப்பை அளிக்கும். நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். உடல் எடையை நிர்வகிக்க உதவும்.

இரவில் குடித்தால்...

இரவில் பால் பருகுவது ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும். பாலில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை தசைகளை, உடலை நெகிழ்வுத்தன்மை கொள்ள செய்யவும், தசைகளை மீட்டெடுக்கவும் உதவும். உடல் போதுமான அளவு கால்சியத்தை உறிஞ்சிக் கொள்வதற்கும் வித்திடும்.

இரு வேளையும் பருகினால்...

காலையிலும், இரவிலும் பால் பருகுவது எலும்புகளை வலுப்படுத்த உதவும். எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கும். குழந்தைகளை பொறுத்தவரை வலுவான பற்களை உருவாக்க வழிவகை செய்யும்.

காலையிலும், இரவிலும் பால் குடிப்பது நன்மை பயக்கும். அவரவர் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப பால் பருகும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்