இந்தியாவில் 'சாட்காம்' சேவைக்கு எலான் மஸ்க் நிறுவனத்துக்கு உரிமம்
மத்திய தொலைத்தொடர்பு துறையிடம் இந்த உரிமத்தை பெறும் 3-வது நிறுவனம் ஸ்டார்லிங்க் ஆகும்.;
உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் இ்ந்தியாவில் 'சாட்காம்' எனப்படும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைக்கான உரிமம் பெற்றுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறையிடம் இந்த உரிமத்தை பெறும் 3-வது நிறுவனம் ஸ்டார்லிங்க் ஆகும். ஸ்டார்லிங்க் விண்ணப்பித்த 15 முதல் 20 நாட்களில், அதற்கு சோதனை ரீதியான ஸ்பெக்ட்ரம் வழங்கப்படும் என்று தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2022ம் ஆண்டு முதல், இந்தியாவில் வணிக உரிமங்களுக்காக ஸ்டார்லிங்க் காத்திருந்தது. ஆனால், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒப்புதல் வழங்குவது காலதாமதமாகி வந்தது. இப்போது ஒப்புதல் கிடைத்திருப்பது, ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்நிலையில், அமேசானின் கைபர், இந்திய உரிமம் பெற ஒப்புதலுக்காக இன்னமும் காத்திருக்கிறது.