தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்து காணப்பட்டது.;

Update:2025-10-03 09:34 IST

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தையும், 29-ந்தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந்தேதி (நேற்று முன்தினம்) ரூ.87 ஆயிரத்தையும் தாண்டியது.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. விலை குறைந்து இருக்கிறதே என நினைத்த மாத்திரத்தில் மாலையில் மீண்டும் அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ஏற்ற-இறக்கத்தை சந்தித்தது.

Advertising
Advertising

காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, நேற்று முன்தினம் விலையிலேயே நேற்று விற்பனை செய்யப்பட்டது. அதாவது, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.164-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 840-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.161-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்;

03.10.2025 ஒரு சவரன் ரூ.86,720 (இன்று)

02.10.2025 ஒரு சவரன் ரூ.87,600 (நேற்று)

01.10.2025 ஒரு சவரன் ரூ.87,600

30.09.2025 ஒரு சவரன் ரூ.86,880

29.09.2025 ஒரு சவரன் ரூ.86,160

28.09.2025 ஒரு சவரன் ரூ.85,120

Tags:    

மேலும் செய்திகள்