இந்தியாவில் தேயிலை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் உயர்வு
வடஇந்தியாவில் தேயிலை ஏற்றுமதி 8.15 சதவீதமாக உயர்ந்துள்ளது;
இந்தியாவில் பணப்பயிரான தேயிலை ஏற்றுமதி உயர்ந்து உள்ளது. முந்தைய நிதியாண்டை (2023-24) காட்டிலும் கடந்த நிதியாண்டில் (2024-25) 2.85 சதவீதம்வரை உயர்ந்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் 25 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டநிலையில், தற்போது அது 25.7 கோடி கிலோ ஆக அதிகரித்துள்ளது.
வடஇந்தியாவில் தேயிலை ஏற்றுமதி 8.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. தென்இந்தியாவில் 4.92 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ரூ.258-ல் இருந்து ரூ.290 வரை (12.65 சதவீதம்) அதிகரித்துள்ளது.