அதானி குழுமத்திற்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு

அதானி குழுமம் தொடர்பான பங்குகளில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.;

Update:2026-01-23 20:05 IST

மும்பை,

அமெரிக்காவில் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகச் சொல்லி அதானி குழுமத்தின் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு புகார்கள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக இந்தியாவின் பங்குச்சந்தை ஆணையமான செபி அமைப்பு விசாரணை நடத்தியதில் முறைகேடுகள் எதுவும் இல்லை என்றே செபி அறிக்கை வெளியிட்டு இருந்தது.

அதேநேரம் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான எஸ்இசி இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்குச் சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் அனுமதி கோரியது. அதானிக்கு சம்மன் அனுப்ப அனுமதி கேட்டு அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில், பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் 10 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரிவால் இன்று ஒரே நாளில் ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு என தகவல் வெளியாகி உள்ளது. அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சிக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்களைக் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்