இந்தியாவில் பெரிய முதலீடு செய்ய ரோல்ஸ் ராய்ஸ் திட்டம்
இந்தியாவில் பெரிய முதலீடு செய்ய ரோல்ஸ் ராய்ஸ் திட்டமிட்டுள்ளது.;
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த இந்த நிறுவனத்தின் சிறப்பம்சமே விமான என்ஜின்கள் தயாரிப்பதுதான். தற்போது தாய்வீடான இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, ஜெர்மனியை கடந்து இந்தியாவில் விமான என்ஜின் தயாரிப்புக்கான புதிய தொழிற்சாலையை உருவாக்க ரோல்ஸ் ராய்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான செயல் துணைத்தலைவர் சாஷி முகுந்தன், “இந்தியாவில் பெரிய முதலீடு ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உருவாகும் போர் விமானங்களுக்காக அடுத்த தலைமுறை என்ஜினை தயாரிக்கவும் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.