ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்;
மும்பை,
சர்வதேச நிலையற்ற தன்மை, அமெரிக்கா - சீனா வர்த்தக மோதல் உள்பட பல்வேறு காரணிகளால் கடந்த 2 நாட்களாக சரிவுடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை இன்று (15.10.2025 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 176 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 315 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 255 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 754 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
225 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 27 ஆயிரத்து 62 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 550 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 82 ஆயிரத்து 587 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
118 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 154 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 166 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 881 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்