எல்லை பாதுகாப்பு படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,121 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
பி.எஸ்.எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,121 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணி வழங்கும் நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்)
காலி இடம்: 1,121
பதவி: தலைமை காவலர் (ரேடியோ ஆபரேட்டர் - 910, ரேடியோ மெக்கானிக் - 211)
கல்வி தகுதி: 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ.
வயது: 23-9-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வும் உண்டு.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதி தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-9-2025
இணையதள முகவரி: https://rectt.bsf.gov.in/