எல்லை பாதுகாப்பு படையில் வேலை: 1,121 பணியிடங்கள்

பிஎஸ்எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் மொத்தம் 1,121- காலிப்பணியிடங்கள் நிரப்ப படுகின்றன.;

Update:2025-09-09 06:27 IST

புதுடெல்லி,

பிஎஸ்எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,121- காலிப்பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரால்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி பற்றிய விவரங்கள் வருமாறு;

பணியிடங்கள்; 'ஹெட் கான்ஸ்டபிள்' பிரிவில் ரேடியோ ஆப்பரேட்டர் 910, ரேடியோ மெக்கானிக் 211 என மொத்தம் 1121 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 18-25 (23.9.2025ன் படி), அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 23.9.2025

கூடுதல் விவரங்களுக்கு: rectt.bsf.gov.in

Tags:    

மேலும் செய்திகள்