புனே ஆர்ம்டு போர்சஸ் மெடிக்கல் கல்லூரியில் என்னென்ன படிப்புகள்? - முழு விவரம்

சுமார் 119 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.;

Update:2025-08-25 12:09 IST

ஆர்ம்டு போர்சஸ் மெடிக்கல் கல்லூரி

ஆசிய நாடுகளில் ஆயுதப்படைமூலம் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி “ஆர்ம்டு போர்சஸ் மெடிக்கல் கல்லூரி”(Armed Forces Medical College) ஆகும். புனேயில் உள்ள இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்வியை உடல்நலம் காக்கும் சிறந்த பயிற்சியோடு வழங்கி வருகிறது.

தற்போது, இந்தியாவிலுள்ள தரம் உயர்ந்த மருத்துவ கல்லூரிகளுள் இந்தக் கல்லூரி சிறப்பிடம் பெறுகிறது. 2003ஆம் ஆண்டு தேசிய தரமதிப்பீட்டு கழகத்தின் சார்பில் (National Assessment Accreditation Council) (NAAC) தரச்சான்றிதழ் பெற்றது. சமீபத்தில் இந்த தேசிய தரமதிப்பீட்டுக் குழுவின் “A+ கிரேடு” பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவப் பட்டப்படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் வழங்குகிறது. இவைதவிர, பல் மருத்துவ பட்ட மேற்படிப்பையும், துணை மருத்துவ படிப்புகளையும் (Para Medical) வழங்கி வருகிறது.

சுமார் 119 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. தேவையான கட்டமைப்பு வசதிகளையும், ஆய்வகங்களையும் கொண்டுள்ள இந்தக் கல்லூரி, தரம்வாய்ந்த மருத்துவப் படிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏராளமான துறைகள்:-

* Anaesthesiology and Critical Care

* Anatomy

* Biochemistry

* College of Nursing

* Community Medicine

* Dental Surgery

* Dermatology

* Forensic Medicine

* Geriatrics

* Hospital Administration

* Internal Medicine

* Microbiology

* Obstetrics and Gynaecology

* Ophthalmology

* Orthopaedics

* Otorhinolaryngo-logy

* Pathology

* Paediatrics

* Pharmacology

* Pharmacy

* Physiology

* Psychiatry

* Radiodiagnosis

* Respiratory Medicine

* Surgey

* Sports Medicine

* Transfusion Medicine

மல்டி ஸ்பெக்ஷாலிட்டி துறைகள்:-

* Cardiology

* CT Surgery

* Neuro Surgery

* Plastic Surgery

மருத்துவ படிப்புகள்:-

இந்தக்கல்லூரியில் நடத்தப்படும் மருத்துவப் படிப்புகள் ராசிக் என்னும் இடத்தில் இயங்கும் “மகாராக்ஷ்டிரா சுகாதார உடல்நல அறிவியல் பல்கலைக்கழகத்தால்” (Maharashtra University of Health Sciences) அங்கீகரிக்கப்பட்டதாகும். மேலும், “தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Counsel) (NMC) இந்த மருத்துவப் படிப்புகளை அங்கீகரித்துள்ளது.

எம்.பி.பி.எஸ் படிப்பு (MBBS Course)

இந்தப் படிப்பு 4½ ஆண்டுகள் படிப்பாகும். பின்னர் ஓராண்டு கட்டாய மருத்துவக் பயிற்சியும் வழங்கப்படும். தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சிகள் முடிந்ததும். ஆயுதப்படை மருத்துவ சேவை பணிகளில் இவர்களுக்கு ‘கமிக்ஷன்ட் ஆபீஸர்’(Commissioned Officer)பதவி வழங்கப்படும்.

இந்தப் பதவியில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணி செய்ய வேண்டும என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை உறுதி செய்யும் விதத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும்போதே மாணவரின் பெற்றோர் அல்லது காப்பாளர் தனியாக ஒரு ஒப்பந்த பத்திரத்தில் (Bond Agreement) கையெழுத்திட வேண்டும்.

ஆர்ம்டு போர்சஸ் நடத்தும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தேவையான தகுதிகள்…

1. இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.

2. திருமாணமாகாதவராக இருக்க வேண்டும். எம்.பி.பி.எஸ். படிப்பை படிக்கும்போது திருமணம் செய்ய அனுமதியில்லை

3. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் நிர்ணயித்துள்ள மருத்துவ தரம் (Medical Standard) கொண்டவராக இருக்க வேண்டும்.

4. 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். (டிசம்பர் 31ஆம் தேதி) அதேபோல் அதிகபட்சமாக 24 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5. முதல் முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி தேர்விலும் கணிதப் பாடத்தை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மொத்த இடங்கள்:-

ஒவ்வொரு ஆண்டும் 145 மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதில், 115 மாணவர்களும், 30 மாணவிகளும் அடங்குவார்கள். மேலும், 5 இடங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நிரப்பப்படும்.

இட ஒதுக்கீடு:-

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின் இனத்தவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும். ‘நீட்’ (NEET) தேர்வுமூலம் தகுதிபெற்ற 10 மாணவ, மாணவிகள் இந்த இடஒதுக்கீடுமூலம் பலன் பெறுவார்கள்.

நர்சிங் படிப்புகள்:-

Basic B.Sc. (Nursing) / B.Sc. Nursing

இந்தப்படிப்பு 4 ஆண்டுகள் படிப்பாகும். மொத்தம் 40 மாணவ-மாணவிகள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

Post Basic B.Sc. Nursing

இந்தப்படிப்பு 2 வருட படிப்பாகும். மொத்தம் 20 மாணவ-மாணவிகள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

M.Sc. Nursing

இந்தப்படிப்பு 2 வருட படிப்பாகும். மொத்தம் 16 மாணவ-மாணவிகள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

Post Basic Diploma in Operation Room Nursing

இந்தப்படிப்பு ஓராண்டு படிப்பாகும். மொத்தம் 8 மாணவ-மாணவிகள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

Post Basic Nursing in Orthopaedic and Rehabilitation Nursing

இந்தப்படிப்பு ஓராண்டு படிப்பாகும். மொத்தம் 6 மாணவ-மாணவிகள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

Post Basic Diploma in Oncology Nursing

இந்தப்படிப்பு ஓராண்டு படிப்பாகும். மொத்தம் 4 மாணவ-மாணவிகள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

Post Basic Diploma in Cardiothoracic Nursing

இந்தப்படிப்பு ஓராண்டு படிப்பாகும். மொத்தம் 4 மாணவ-மாணவிகள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

Post Basic Diploma in Neonatal Nursing

இந்தப்படிப்பு ஓராண்டு படிப்பாகும். மொத்தம் 4 மாணவ-மாணவிகள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

துணை மருத்துவப் படிப்புகள்:- (PARA MEDICAL COURSES)

Post Graduation Courses for Paramedics

Post Graduate Diploma in Medical Laboratory Technician (Post BSc) இந்தப்படிப்பு ஓராண்டு படிப்பாகும். மொத்தம் 30 மாணவ-மாணவிகள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

Graduation Course for Paramedics

துணை மருத்துவப் படிப்பில் பட்டப்படிப்பாக கீழ்க்கண்ட பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

1.Bachelor of Paramedical Technology (Laboratary Technician)

இந்தப்படிப்பில் 30 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

2.Bachelor of Paramedical Technology (Radiographic Technician)

இந்தப்படிப்பில் 15 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

3.Bachelor of Paramedical Technology (Radiotherapy Technician)

இந்தப்படிப்பில் 5 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

4.Bachelor of Paramedical Technology (Cardio Technician)

இந்தப்படிப்பில் 5 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

5.Bachelor of Paramedical Technology (Neuro Technician)

இந்தப்படிப்பில் 5 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

6.Bachelor of Paramedical Technology (Blood Transfusion Technician)

இந்தப்படிப்பில் 5 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

7.Bachelor of Paramedical Technology (Optometry Technician)

இந்தப்படிப்பில் 5 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

8.Bachelor of Paramedical Technology (Perfusionist)

இந்தப்படிப்பில் 8 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

9.Bachelor of Paramedical Technology (Operation Theatre Technician)

இந்தப்படிப்பில் 10 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

10.Bachelor of Paramedical Technology (Endoscopy)

இந்தப்படிப்பில் 5 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

11.Bachelor of Paramedical Technology (Community Medicine / Health Inspector Emergency Medical Services)

இந்தப்படிப்பில் 95 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள படிப்புகளில் சேர பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் சேர்த்து சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இவைதவிர, ஆர்ம்டு ஃபோர்சஸ் மெடிக்கல் கல்லூரியில் Laboratary Assistant, X-Ray Assistant, Pharmacology, Dental Technician, Dental Hygenist ஆகிய படிப்புகளும் நடத்தப்படுகின்றன. மேலும், MRI, Electron Microscopy, Virology, Prosthodontics போன்ற சிறப்பு பாடப்பிரிவுகளில் நர்சிங் அசிஸ்டென்ட் (Nursing Assistant) பதவிக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

ஸ்பீச் தெரபி அன்ட் ஹியரிங் எய்டு கோர்ஸ் (Speech Therapy and Hearing Aid Course) என்ற படிப்பும், ரீமஸ்டரிங் கோர்ஸ் (Remustering Course) என்ற படிப்பும் இங்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் விவரங்களுக்கு…

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Armed Forces Medical College,

Wanowrie,

Pune-411 040,

Maharashtra,

India.

website: www.afmc.nic.இந்த

 

Tags:    

மேலும் செய்திகள்