இந்தியக் கடலோர காவல் படையில் வேலை

இந்தியக் கடலோர காவல் படையில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2025-01-28 16:30 IST

இந்தியக் கடலோர காவல் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்ரவரி 18 ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலிப்பணியிடங்கள்: 48

பணி: உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: 34

சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800

கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முன்னணி கை தீயணைப்பு வீரர்(Leading Hand Fireman)

காலிப்பணியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ. 5,200 20,200

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fire Fighting Appliances-ல் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Directorate of EP, CP, A & R (for SCSO(CP)), Coast Guard Head Quarters, National Stadium Complex, New Delhi - 110 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 18.2.2025

Tags:    

மேலும் செய்திகள்